Friday, September 25, 2009

கலாமே...

கலாமே
கட்டளை இட்டாய் எங்களுக்கு
கனவு காணச் சொல்லி.
கட்டுப்பட்டு
கனவு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

எதிர்கால தூண்களாகிய
எங்களின் வீட்டில்
பொங்குவதற்கு - ஒரு
பொழுதேனும் அரிசி கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்.

கனவு தான்
கண்டு கொண்டிருக்கிறோம்
கலாமே -
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு.

கையில் பல சான்றிதழ்களுடன்
கட்டிடங்கள் பல ஏறியும்
வேலை கிடைக்காத
விரக்தியில் கூட
நாளை நமதே என்ற நம்பிக்கையில்.

கனவு தான்
கண்டு கொண்டிருக்கிறோம்
கலாமே -
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு.

0 comments: